தற்போதைய தொகுதி நிலவரப்படி

ஆயிரம்வாலாக்களின் வெடித்த மிச்சங்கள்
பிரியாணி பொட்டலங்கள்
காலி போத்தல்கள்
கொடி வர்ணத் தோரணங்கள்
லட்டு டப்பாக்கள்
கிழிந்த கறைவேட்டிகள்
இன்னபிற நெகிழி எச்சங்கள்
ஆகியவற்றை சுமந்து
புதிதாய் போட்டிருந்த சாலையில்
புதிதாய் விழுந்திருந்த குழியிறங்கி
குலுங்கியபடி செல்லும் குப்பை வண்டியில்
யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கின்றன
கொள்கைகளும் வாக்குறுதிகளும்
குறைந்தபட்ச சமூக பொறுப்புணர்வும்.

எழுதியவர் : ஈ.ரா. (30-Jun-15, 11:22 pm)
பார்வை : 96

மேலே