மெட்ரோ ரயில் கவிதை
*
மக்கள் நெரிசல் மிகுந்தது
சென்னை மாநகரம்
போக்குவரத்து வாகனத்தில்
போகும் கூட்டம் அவசரம்.
*
பஸ் ரயில் ஆட்டோவில்
பயணிகள் கூட்டம் அதிகம்
முட்டிமோதி பயணம் செய்து
போய்சேரத் துடிப்பவர்கள் அதிகம்
*
அந்த காலம் டிராம் வண்டி
அழகாய் ஒடி நின்றது
என்றும் மறக்க முடியாமல்
இன்னும் நினைவில் நிற்பது.
*
எட்டாக் கனவாய் இருந்தத் திட்டம்
வெற்றி பெற்று விட்டது
பட்டாம்பூச்சிப் போலவே – இப்ப
மெட்ரோரயில் பறக்குது.
*