அடடா அப்படியா - குமரி

மனைவி (செய்தித்தாள் வாசித்தபடி) கணவனிடம்::
இனி மார்கெட்டுக்கு போனால் சொத்த இருக்குற காய்கறியா பார்த்து வாங்குங்க..!!

கணவன்:::என்னடி புதுசா குண்டை தூக்கி போடுற..? கத்திரிக்கா கொஞ்சம் உரசி இருந்தாலே எகிறி குதிப்பியே. இப்போ என்னாச்சு..?

மனைவி::செய்திலே போட்டு இருக்காங்க..... புழு பூச்சி இருக்குற காய்கறிதான் ரசாயனம் கலக்காத நல்ல காய்கறியாம்...!!..

கணவன்:::அடடா....! இந்த செய்தியை ஒரு வாரத்துக்கு முன்னே போட்டு தொலைச்சு இருக்கலாமே...???

மனைவி::இப்போ என்ன கெட்டு போச்சாம்????

கணவன்:::போன வாரம்தாண்டி என் சொத்த பல்லை பிடுங்கினேன்..!! பணமும் போச்சு..நல்ல பல்லும் போச்சு...!

மனைவி::!!!!!!

எழுதியவர் : குமரி பையன் (1-Jul-15, 3:03 pm)
பார்வை : 478

சிறந்த நகைச்சுவைகள்

மேலே