அமெரிக்காவும் ஆண்டிபட்டியும்

முன் குறிப்பு - தயவு செய்து இந்த பதிவை தவறான கண்ணோட்டத்தில் அணுக வேண்டாம்.

அமெரிக்காவில் பல மாநிலங்களில், பெண்கள் பொது இடங்களில் மேலாடை இன்றி செல்ல அனுமதி உண்டு. 1930க்கு முன்பாக ஆண்களுக்கே இந்த உரிமை கிடையாது.அப்படி முழுமையாக ஆடை அணிவதையே கௌரவமாக கருதினார்கள், (அது கௌரவம் அல்ல அவர்கள் சூழ்நிலையின் தேவை)

பின் அவர்கள் போராடி வாங்கினர், இப்போது பெண்களுக்கும் உரிமை வழங்கப் பட்டுள்ளது. இது சம உரிமை நோக்கத்திற்க்காக பெறப்பட்டது.
.

ஆனால் நம் முன்னோர்களைப் பார்ப்போம். 2000 முதல் 1000 வருடங்களுக்கு முன் வரைந்த ஓவியங்களும் சிற்பங்களையும் (அஜெந்தா ஓவியம், சோழர் ஓவியங்கள், பாண்டிய ஓவியங்கள், இன்னும் பல) கவனியுங்கள். பெண்கள் ஆணுக்கு நிகராகவே உடை அணிந்தனர். மார்பகம் காம உணர்ச்சியோடு பார்க்கப் படவில்லை. பொது இடங்களில் மற்ற ஆண்கள் முன்னிலையிலும் இயல்பாகவே இருந்தனர். பெண் சமமாகவே மதிக்கப்பட்டாள். பெண் அனைத்து துறைகளிலும் சிறந்து வளங்கினாள். எத்தனையோ பெண் கவிஞர்கள் பாடல்கள் பாடியும் யாரும் பெண் விடுதலை பேசவேயில்லை. ஏன்???
ஏனெனில் நம்மிடம் பெண் அடிமைத் தன்மையே இல்லை.


பிற்காலத்தில் சில முகலிய ஆட்சி பின் ஆங்கிளேயர் ஆட்சியின் போதே... பெண்களை போதை பொருளாக பார்பது, அவள் உடலை மறைத்தால் தான் ஒழுக்கமானவள் போன்ற சிந்தனை விதைக்க பட்டது. ஏனெனில் அவர்கள் நாகரீக பாதையில் அது போதிக்க பட்டது. ஆங்கிலேய நாகரீகத்திற்க்கு அடிப்படையான நாகரீகங்களான கிரேக்க மன்றும் ரோமானிய நாகரீகத்தில் இந்த கருத்து பதிவுகளை வெட்ட வெளிச்சமாக பார்க்களாம்.

நம் நாட்டில் மேல்லிடத்து பெண்கள்/ஆண்கள் மூலமே கலாச்சார மாற்றம் ஏற்பட்டது. பின் நாம் அவர்கள் சொல்வதே வேத வாக்கு என நம்பி, நம் பெண்களை துன்பப் படுத்தினோம்/படுத்துகிறோம். நம் சூழழுக்கும் உகந்த உடை அல்ல இது. இதை ஒரு பெரிய காரியமாக கொண்டு ஒரு கூட்டம் ‘தமிழ் கலாச்ச்க்க்ரம்” கண்ணாம்பூச்சி வேறு ஆடுகிறது. இப்போது அவர்கள் நம் மூதாதயர் வழிக்கு திரும்ப முயல்கிறார்கள், நாமும் திரும்ப முயற்ச்சிக்கிறோம், ஆனால் நம் மூதாதயரை கை காட்டி அல்ல, மேற்கை கை காட்டி.

நாம் ஏன் இவ்வளவு முட்டாளாக இருக்கிறோம்? உடையில் மட்டும் அல்ல இன்னும் பல இடங்களில் நாம் மழுங்கி இருக்கிறோம். அவர்களோட மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா?
உலகிலேயே நாமும் நம் முன்னோர்களும் தான் முட்டாள்கள் என நம்மையே நம்ப வைத்தது தான்? இந்து மதமும் அதன் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகள் எனவும் அறிவியல் மட்டுமே தலையாயது எனவும் சொன்னார்கள், நாமும் தலை அசைக்கிறோம். எதை நம்பி? சூரியனை ஒன்பது கோள்கள் சுற்றுகிறது என சொன்ன அறிவியல் இப்போது “இல்ல தப்பா சொல்லிட்டோம் எட்டு தான்”னு மன்னிப்புகேட்குது. நீங்களும் வானத்துக்கு போவ் எண்ணிபாக்கால நானும் பாக்கல ஆனா நம்புவோம், ஏனா சொல்றது மேற்க்குல இருந்து. நவகிரங்கள் மட்டும் மூடநம்பிக்கை.
ஐன்ஸ்டீன் பிரபஞ்சத்தில் உள்ள எந்த பொருளின் விசையும் வெகுதொலைவில் உள்ள மன்றொரு பொருளை பாதிக்கும் என்று சொன்னால் அது அறிவியல். சனியும் குருவும் நம்மை தாக்குமென்றால் அது மூட நம்பிக்கை. இன்னும் பல.........

இன்னும் அறிவியலால் நம்ப முடியாத கண்டுபிடிப்புகள் நம் மண்ணில் உள்ளது. பல உளவியல் அறிஞர்கள் வாழ்ந்த பூமி இது. இதை புரிந்து கொள்ளவாவது முயற்சிப்போம் இனி.

நன்றி
- ந.நா

எழுதியவர் : ந.நா (1-Jul-15, 8:10 pm)
சேர்த்தது : நநா தமிழ்
பார்வை : 522

சிறந்த கட்டுரைகள்

மேலே