நீயே

நீ
தொட்டு தந்த
வேம்பும் இனிக்குதடி
நீ
தீண்ட மறுத்த
தேனோ கசக்குதடி
உன்
மூச்சுப்பட்டால்
மொட்டும் மலருமே
உன்
பேச்சுக்கேட்டால்
சிட்டும் பாடுமே
பேச்சுத் துணையும்
நீயே!
என்
மூச்சுத் துணையும்
நீயே!
கனவிலும் நீயே!
கண் விழித்தாலும்
நீயே!
மனதருகே வந்தவளும்
நீயே!
மலரம்பு தொடுத்தவளும் நீயே!
என் உயிரில்
கலந்தவளும் நீயே!
என் உயிரை
தொட்டு பறித்தவளும்
நீயே!

எழுதியவர் : அமலி அம்மு (2-Jul-15, 12:09 pm)
Tanglish : neeye
பார்வை : 90

மேலே