உன் பெண்மையும் என் ஆண்மையும்

உன் மை வண்ண நிழலின்
மடி மீது சாய்ந்து கிடக்க
மன்றாடி நிற்கும் என்
பகல்கள்..

தேங்காய் நீராய் உன்
செவ்விதழ் இனிக்க
நீருக்குள் நீச்சல் பழக
என்னிதழை நான் திணிக்க
திணறி நிற்கும் என்
நரம்புகள்..

உன் புருவ நுனியில்
என் மீசை உரசி உறங்க
உண்ணாமல் நிற்கும் என்
இரவுகள்..

பருவம் மலர்ந்த மழலையே
உன் இதழ் இடையே இரவில்
உறங்கும் கட்டைவிரலாய் மாறி
காமத்தீயில் கருக
காத்து நிற்கும் என்
ஆண்மை..

கருமைக் கடலில் ஓர்
வெந்நிலவாய் நீந்தும்
பெண்மையே உனை
நாணம் கொண்டு நானும்
மறையச் செய்ய உள் நீச்சலில்
மறைந்து வரும் கதிரவனாய் நான்..

அதிகாலைப் பொழுதில்
அரங்கேறும் இந்நிகழ்வு...செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (2-Jul-15, 12:13 pm)
பார்வை : 101

மேலே