என் அருமை காதலியே

ஆர்பரிக்கும் கடலும்
அடங்கிவிடும்
உன் சிர்ப்பலையால்
கொட்டும் அருவியும்
நிசப்த்தம் ஆகிவிடும்
உன் கால் கொலுசின் ஓசையால்
காட்டாற்று வெள்ளமும்
அமைதியாய் ஓடும்
உன் ஓட்டத்தின் வேகத்தால்
சுட்டெரிக்கும் சூரியனும்
சுகமாய் குளுமைதரும்
உன் கோபத்தின் உச்சத்தால்
இரவினிலே ஒளிமுகம்
காட்டும் நிலவும்
ஒளிந்து கொள்ளும்
உன் பேரழகால் ..