தளிர்கள்
76
அசைந்தேன் இசை கேட்டது.
77
விளைச்சல்கள் திருடப் படுகின்றன….
78
தவறான கானம் சரியாக முடிந்தது…. உயிர் பிறிந்தது.
79
தப்பு நடந்து விட்டது… ஆபத்து வராமலா இருக்கும்?
80
வலித்த பின்னும் சலிப்பு வரவில்லை.
81
உண்மைகளைக்காண கண்கள் கற்றுக்கொள்வதில்லை.
82
மை இல்லாத பேனா விலிருந்து எழுத்து சொட்டியது.
83
எழுத்துக்கள் எழுத்தாணியிலா இருக்கும்?
84
மொழி உள்ளது… வழி இல்லை.
85
அறிவித்த பின்னரும் அறிவுக்கு எட்டவில்லை.
86
பிழைப்பு ஒளிர வாழ்க்கை உருகி விட்டது.
87
நிற்பதும் பயணத்தில் ஒரு அங்கம் தான்.
88
வாதங்கள் செய்வதால் சாதனைகள் நிகழாது.
89
நட்பு நிகழ்ந்தது, ஏமாற்றம் மிஞ்சியது.
90
தணியாத தாகம் வேட்க்கைகளை மூட்டுகிறது.
91
வாழ்க்கையும், வாழ்தலும் சந்தித்தன…. மனிதனே நீ எங்கே?
92
“முற்போக்கு” என்றார்கள்…. முறை கேடுகள் மூண்டன.
93
பார்ப்பதை நிறுத்தி விட்டான்… ஒளியைத் தேடுகிறான்.
94
புன்னகை விரிந்தது… வேறொன்று தெரிந்தது..
95
ஒளி வந்தால் தெரிந்து விடுமல்லவா?
96
அடி விழுந்தது… உண்மை புரிந்த்து.
97
கண்களைத் திறந்துக் கொண்டான்… கவிஞன் ஆனான்.
98
இயற்கை ஆசீர்வதிக்கிறது…தென்றல் வீசுகிறது.
99
வண்ணங்கள் வெளுத்தன…. உண்மைகளின் மழைப் பொழிந்தது.
100
‘பொய்மை’ உள் மூச்சானால் ‘ஆபத்து’ வெளி மூச்சாகும்.
101
நன்மை என்பது வித்தானால் ஏன்றோ ஒரு நாள் மாமரமாகும்.
102
சிந்தனைகள் உரையாடுகின்றன… கவிதை ஒலிக்கிறது.
103
முற்கள் எத்துனை காலம் இருப்பினும் மலர்களாவதில்லை.
104
விளம்பரங்கள் பலி கேட்கின்றன.
105
தாகம் தேகத்தோடு சினேகம் செய்கிறது.
106
புலவர்கள் வருகிறார்கள்…. குழப்பங்கள் குறைவதில்லை.
107
காயங்களும்… களங்கங்களும்… வாழ்க்கைக்கு விளக்கங்களா?
108
உண்ட பிறகு பசி கூடுகிறது.