வறட்சி
என் வானந்திரத்தில் மட்டும்
வருட கணக்கில் மழை இல்லையே
மேகங்கள் மலடாகி போயினவோ ?
தோண்டி வைத்த கிணற்றின்
ஊற்றுக்கண்கள் எல்லாம்
திடீரென மூடிக்கொண்டது ஏன்?
என் வாய்க்கால்கள் எல்லாம்
வாய் பிளந்து கதறி காய்வது
கேட்கவே இல்லையா கடவுளுக்கு ?
என் வரப்புகளுக்கு மட்டும்
வாராது போவது ஏன்
அந்த வெற்றி தேவதை?
கலப்பையோடு காத்திருக்கிறேன்
நான் உழுது விளைவதில்தான்
உயிர்வாழவேண்டும் - அந்த
கரிச்சான் குருவிகளும் கிளிகளும்
அதற்காகவேனும் .......
கண்டிப்பாக வரவேண்டும்
ஒரு வசந்த காலம் .....