உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 14
![](https://eluthu.com/images/loading.gif)
எல்லோரிடமும் இருக்கும் உன்னை விட
எனக்குள் இருக்கும் நீ
முன்னை விட அழகாய்
என்னைவிட அன்பாய்
எனக்குள்ளேயே இருக்கிறாய்.
இது தெரியாமல் இத்தனை நாள்
உன்னை வெளியில் தேடி
வேதனைப் பட்டதற்காக வெட்கப் படுகிறேன்.
என் வீட்டு வாசலில் நானே
பிச்சை எடுப்பதை போல்.
நான் உன்னால் வரும் தோல்விகளில்
தொலைந்து போய்விடவில்லை
ஆனால் அதை
தொடந்து போய்க்கொண்டு இருக்கிறேன்.
நீ பிரிந்த பின்னும்
நீங்க மறுக்கிறது உன் நினைவுகள்.
உன் நெற்றிப் பொட்டின்
தழும்புகளைப் போலவே.
என்மீது நீ காட்டிய அன்பு பொய் என்றால்
நீ வாழ்கின்ற வாழ்கையும் பொய்.
நீ விலகிப் போனதைப் போல்
நானும் விலகிப் போவேனென்று
எதிர்வாதம் செய்யத் தெரியவில்லை எனக்கு.
ஏனென்றால்
நான் நானாகவே இருக்கின்றேன்.
நீ தான் நீயாகவே இல்லை.