தோழனே வா

பிறக்கும் போது
என் தாயின் மடியிலும்....
இறக்கும் போது
என் நண்பன் மடியிலும்......
இருத்தல் வேண்டும்.

என் இதயம்
ஒவ்வொரு முறையும்
துடிக்கிறது......
ஏனென்றால்
என் நட்பு எங்கு
பிரிந்து விடுமோ ....
என்று..

ஏழு கடல் தாண்டிச்
சென்றாலும்....
நாங்கள் பிரிகிறோம்....
என்றால்
இருவரும் இறந்து விட்டதாக
அர்த்தம்......

இந்த உலகமே அழிந்தாலும்...
பின்வரும் தலை முறைகளுக்கு
எங்களின் நட்பு
அடயாளம்.....

எழுதியவர் : (2-Jul-15, 7:08 pm)
பார்வை : 69

மேலே