எழும் புரட்சி பாரதம் - உதயா

கனல் கக்கும்
சுவாலையுடன்
தீபகற்பத்தின் உச்சியில்
ஆக்ரோஷத்துடன்
இளைஞ்சர் பாரதம்
எழுகிறது...!

குருதியாறுகளின்
ருத்ரதாண்டவ கொந்தளிப்பில்
அநீதி அணைகளெல்லாம்
அணுக்களாய்
தகத்தெறியப்படுகிறது..!

இவர்களின்
துணிவு துடிப்பினில்
வானும் மண்ணும்
நீரும் காற்றும்
வெறும் பிள்ளையார் சுழியின்
புள்ளிகளாகிவிடுகிறது..!

தொண்டையில் சிக்கும்
மீன் முள்ளாகும்
காட்சியனைத்தும் அவன்
தொடைதட்டும் சத்தத்தில்
தவிடுபொடியாகிவிடுகிறது..!

பெண்ணின்
மேனியை அலங்கோலம் செய்து
கற்பை கரையாக்க என்னும்
கயவர்களெல்லாம் அவள்
வாள் வீசும் விழி முனையில்
பஷ்மமாகிவிடுகிறார்கள்..!

அதர்மங்கள்
காய்ந்த கருவாடாய்
கருக
தர்மங்கள்
கற்பக விருட்சமாய்
மலர தொடங்குகிறது..!

பத்தினிக்கு பிறந்தவனே
இவ்விளைஞர் பாரதத்தின்
தூண்களாகிறான்
தூண்களை உடைக்க
நெருங்குபவர்களையும்
தும்சம் செய்கிறான் ..!

உணவில்
உவர்ப்பு சேர்த்து
உண்பவனே
உலகை
சொர்க்க பூமியாய்
செதுக்கும்
சிற்பியாகிறான்..!

உடலில்
உணர்வு
மானம்
சொரணை உள்ளவனே
மாண்டு போன
தர்மங்களுக்கு
உயிரளிக்கும்
பிரம்மனாகிறான் ..!

கவிஞ்சனெல்லாம்
தன் எழுதுகோளை
மதம்பிடித்த யானையாக
மாற்றி வைக்கிறான்..!

இவ்விளைஞர் பாரதம்
காந்தபுலத்தின்
துருவத்தை கூட
கிழக்கு மேற்காக
மாற்றி வைக்கும் ..!

கந்தக அமிலம் கூட
இவர்கள் உணவு உண்ண
சாதம் சமைத்துக்கொடுக்க
துணைபுரியும் ..!

பாரில்
நீர் குடித்து
வாழ்பவன்
இவ்விளைஞர்
பாரத தேரின்
சாரதி..!

பாரில்
சிறுநீரைக் குடித்து
வாழ்பவன்
இவ்விளைஞர்
பாரத தேரின்
சக்கரத்தில் நிச்சயம்
ஒரு நாள் நசுங்கும்
சகதி..!

எழுதியவர் : உதயா (2-Jul-15, 7:16 pm)
பார்வை : 722

மேலே