வெட்டியாய் இருந்துப்பார்
வெட்டியாய் இருந்துப்பார்
கதிரவனின் நிறம் மறந்துபோகும் ,
தொலைகாட்சி நாடகநேரம் அத்துப்படியாகும் ,
வெட்டியாய் இருந்துப்பார்
உன் பெயருக்கே உனக்கு எழுத்துக்கள் மறந்துபோகும் ,
உன் கையெழுத்து சமையல் எரிவாயு வந்தால் மட்டும் உபயோகமாகும்
வெட்டியாய் இருந்துப்பார்
வேலை தேடுவதில் நீ ஒரு வெறிநாய் ,
ஊர் சுத்துவதில் நீ ஒரு தெருநாய் ,
அப்பாவிடம் பணம் கேட்பதில் நீ ஒரு சொறிநாய்
வெட்டியாய் இருந்துப்பார்
தேதியும் கிழமையும் மறந்தே போகும்
ஞாயிற்றுக்கிழமை வேதனை ஆகும்
வெட்டியாய் இருந்துப்பார்
வெட்டியாய் இருந்துப்பார்
எப்போதும் மனம் கெட்டியாய் இருந்துப்பார் ,
வெட்டியாய் இருந்துப்பார் .....