எனக்குள் கவிஞன்
பொழுதுபோக்காய் எழுத ஆரம்பித்து
முற்போக்கு சிந்தனைகளை எழுத நினைக்கும்
கத்துகுட்டி கவிஞன் நான்
வார்த்தைகளின் வர்ணஜாலங்கள் தான்
கவிதை என நினைத்து
வாய்க்கு வந்த வர்ணனைகளை எல்லாம்
வீசி குவித்த வேடிக்கை கவிஞன் நான்
கரை படிந்த சமூகத்தை
சலவை செய்ய நினைத்தும்
நண்பர்களின் காதல் கடிதங்களிலேயே
கரைந்துபோன காமெடி கவிஞன் நான்
அரிதாரம் பூசினால்தான் நடிகனுக்கு அழகு
அலங்கார வார்த்தைகள்தான் கவிதைக்கு அழகு
என பழமொழி பேசும்
வியாக்கியான கவிஞன் நான்
சாமானியனின் நாவாக கவிஞனின் பேணா மாற வேண்டும்
மூடநம்பிக்கை எனும் மூடுபனியை
கவியொளி அகற்ற வேண்டும்
இப்படி கவிஞனின் கடமைகள் பலவிருப்பதை
தாமதமாக உணர்ந்தவன் நான்
அனுதினம் நடப்பதை அனுபவம் தருவதை
என் பேனாவில் உண்மைகளாக இட்டு
மானுடம் விழித்திட வையகம் செழித்திட
சமூக கவிகளை படைத்து
கடமை புரிவான் இக்கவிஞன்
- சுஜீத்