சீர்காழி என்ற திருப்பூந்தராய் - பாடல் 8

சீர்காழி என்ற திருப்பூந்தராய் ஊரில் விளங்கும் சிவபெருமான் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தில் பியந்தைக் காந்தாரம் பண்ணில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த 8 ஆம் பாடல்.

பாடல் 8 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேள்பட விழிசெய்தன் றுவிடைமே
...லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி
...வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற
...னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல
...நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத் திறந்து எரித்து விடைமீது உமைமங்கை யோடும் உடனாய் இருந்து, முடிமிசை ஒளி பொருந்திய பிறை, வன்னி, கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிறராலும் துன்பங்கள் நம்மை வந்து தொல்லை செய்து துன்புறுத்தாது. ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அதுபோல அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர். .

குறிப்புரை:

விழிசெய்து - நெற்றிவிழி திறந்து எரித்து, வாள் – ஒளி, அரையன் - அரசன், இராவணன்,

இடர் ஆன - துன்பமானவை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-15, 10:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 122

சிறந்த கட்டுரைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே