அந்த ஏழு நாட்கள்
அந்த ஏழு நாட்கள்..
====================================ருத்ரா
முதலாம் நாள்
மண்.
இரண்டாம் நாள்
சுழற்சி.
மூன்றாம் நாள்
எங்கிருந்தோ முகமே இல்லாத
ஒரு கை.
நான்காம் நாள்
விரல்கள் இடையே
விடு கதைகள்.
ஐந்தாம் நாள்
மண்ணின் வழியே உயிர்.
உயிர்க்கு வழிவிடும் "உயிர்"
ஆறாம் நாள்
உயிர்..உயிர்..உயிர்
உயிரையும்
முண்டியடித்துக்கொண்டு
"ஆசை"
ஏழாம் நாள்
மீண்டும் "மண்"
மனிதம் எப்போது முளைவிடும் ?
__________________________________________