அவையிரண்டும் உன்னுடன் மட்டுமே

அவையிரண்டும் உன்னுடன் மட்டுமே


உன் காதலை ஏற்றுக்கொண்டதற்காக
என் அலைப்பேசியின்
அனைத்து ஆண் நண்பர்களின்
எண்களையும்
அழிக்க சொன்னாய்...
அழித்து விட்டேன்

என் முகநூலின்
கடவுச்சொல்லையும்
கொடுத்து விட்டேன்

இப்பொழுதும்கூட
அலைப்பேசியின் அழைப்பில்
புதிய எண் வந்தால்
அது ஆணா பெண்ணா
என்று தெரிந்துகொள்ள
அதிக ஆர்வம் காட்டுகிறாய்

வலிக்கும் இதயத்தோடு
உனக்கு சொல்லிக்கொள்கிறேன்
ஆண் நண்பர்கள் அனைவரும்
என் அந்தரங்கம்
சம்பந்தப்பட்டவர்கள் அல்ல

ஆண்கள் அழைக்கும்
அனைத்து அலைப்பேசி எண்களும்
என் பாலுணர்வு பகிர்தலுக்காக அல்ல

அவையிரண்டும் உன்னுடன் மட்டுமே

எழுதியவர் : இ ஆ சதீஸ்குமார் (6-Jul-15, 3:51 am)
பார்வை : 94

மேலே