பொழுதுகள்

துயரம் நிறைந்த பொழுதுகளும்,
துவண்டுபோன பகுதிகளும்,
நிறையவே இரைந்துகிடக்கிறது,
கடந்துவந்த வாழ்க்கையில் !
நம்பிக்கையற்றவன்,
நம்பமுடியாதவன்,
நம்பத்தகாதவன்,
நம்பிக்கைகெட்டவன்,
என்றெல்லாம் ஒரே அர்த்தம் தரும் !
வெவ்வேறு வார்த்தைகள் !
வலம்வந்தபடியே இருந்தது என்னை !
எல்லாம் மறைந்து மாறிவிட்டது இன்று !
ஆனாலும்,
நான் வெம்பிக்கிடக்கிறேன்!
அன்றெல்லாம்,
எனை நம்பிக்கிடந்த,
ஒரே ஒருத்தி இல்லாமல் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Jul-15, 7:56 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : poluthukal
பார்வை : 60

மேலே