யோசி

மாடங்களில் நின்று,
காட்சி தரவேண்டிய நீ !
இந்த மனிதனை நம்பி,
கட்டுப்பெட்டியாய் பின்னால்,
ஒட்டுப்போட்ட சேலையுடன் நிற்கிறாயே !
தேவையா இந்த தேய்பிறைக்காதல்?
திக்குத்தெரியாமல் திணறித்தடுமாற?
யோசி பெண்ணே திரும்ப !
மிச்சமிருக்கிறது இன்னும் மெத்த வாழ்க்கை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Jul-15, 7:47 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 77

மேலே