ஏய் பெண்ணே

யாரடி நீ எனக்கு

நீ எந்தன் கடல் ஆனால்
அதில் மூல்கி தினம் நானும் சாவேனே

நீ எந்தன் சிறை என்றால்
உனக்காக அதினுள்ளே வாழ்வேனே

ஏதோ ஒன்றால் என் நெஞ்சை துளைத்தாயே
பாலை வனம் எனை பச்சை நிலம் மாற்றினாள்

யாரடி நீ எனக்கு

நீ எந்தன் நிஜம் என்றால்
நிழலாக உன் பாதம் படர்வேனே
நீ எந்தன் மழை என்றால்
குடையின்றி உன்னில் நான் கரைவேனே

ஒற்றை கண் பார்வையால் எனை கொண்றாயே
இதழின் ரேகை பதித்து மீண்டும் உயிர்பித்தாயே

யாரடி நீ எனக்கு
என்னவளே
எனக்கானவளே

எழுதியவர் : சரவணன் (6-Jul-15, 8:48 pm)
Tanglish : EI penne
பார்வை : 101

மேலே