உலகை மறந்தேன் உன்னருகே
உலகை மறந்தேன்
உன்னருகே...
உயிரை தொலைத்தேன்
உன்னுள்ளே...
காயும் நிலவை
கேட்கிலையோ...
என் தனிமையின்
அவஸ்தை புரியலையோ...
வார்த்தையின் வலியை
உணரலையோ...
இந்த வலியும்
எனையோ கொன்றிடுமோ...
கேட்கும் ஓசையெல்லாம்
உன் ஒலியே...
உயிரை ஓசையோடு
ஒட்டிவைத்தேன்...
உன் வாய்மொழி
மட்டுமே...
திட்டியதோ...
உயிர்மொழி
எனைபோல்
அழுகிறதோ...