காதல் கேளாய் கண்மணி

உனக்கான காத்திருப்பில்
வருவதாகச் சொல்லாத
மழை கூட வந்துவிட்டது
வந்து விடுவதாக உறுதி சொன்ன
உனைக் காணவில்லை
நேரம் தவறாகக் காட்டுவதாய்
கடிகாரத்தைக் குறை சொல்லியும்,
போக்குவரத்து நெரிசல்,மிகைப்பணி
என்ற சுயகாரணங்களால்
எனைத் தேற்றிக்கொண்டும்
நெடுநேரம் காத்திருக்க
காத்திருப்பின் நீட்சீயில்............
காலநிலை மாறவே
வெண்ணிலா வந்து
வானத்தில் விளக்கேற்றியது
காத்திருப்பின் சுகம் மட்டும் தந்துவிட்டு
கடைசி வரை நீ வரவேயில்லை
என்றாலும் நாளை நிச்சயம் வந்துவிடுவாய்
என நான் நினைத்துக்கொள்வேன்
ஏனெனில்.........
உன்னில் ஒருபோதும் குறை காண்பதில்லை
என் காதல்.........

எழுதியவர் : ம கோபி (6-Jul-15, 9:37 pm)
பார்வை : 104

மேலே