என் அன்பு தேவதையே

********** @@@@@ ********** @@@@@
ஒரு நொடி,
உன் விழி என் விழியோடு பேசும்!
அந்த நாளின்,
ஒவ்வொரு நொடியும்,
என் மனம் உன் மனதோடு பேசும்..
********** @@@@@ ********** @@@@@
ஒரு சொல்லில்,
உன் உதடுகளில் நான் இருப்பேன்!
அந்த நாளின்,
ஒவ்வொரு சொல்லிலும்,
என் செவியோடு நீ இருப்பாய்..
********** @@@@@ ********** @@@@@
ஒரு அசைவில்,
என் உடமைகளில் உரசி செல்வாய்!
அந்த நாளின்,
ஒவ்வொரு அசைவுகளும்,
என் இதயத்தில் தடம் பதிக்கும்..
********** @@@@@ ********** @@@@@
ஒரு சிரிப்பில்,
என் உள்ளம் கவர்ந்து செல்வாய்!
அந்த நாளின்,
ஒவ்வொரு சிரிப்பொலியிலும்
நீயேதான் நிறைந்திருப்பாய்..
********** @@@@@ ********** @@@@@
ஒரு உயிராய்,
நான் உன்னிடம் தேடி வந்தேன்
இந்த உயிரையும்,
உந்தன் உறவெனவே
ஆக்கிக்கொள்ளடி என் அன்பு தேவதையே!..
********** @@@@@ ********** @@@@@

எழுதியவர் : சீர்காழி சபாபதி (6-Jul-15, 11:17 pm)
பார்வை : 420

மேலே