என்னக்கும் நாடகம் பாக்க அசைகள் இருக்கு ஆனால்

என்னக்கும் நாடகம் பாக்க அசைகள் இருக்கு ஆனால்..........
1. அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது,
2. அன்னியர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது,
3. மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது,
4. மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது ,
5. பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு
செய்யலாம்
6. அதை எப்படியெல்லாம் மறைக்கலாம்,
7. அக்கம்பக்கம்த்தினர் உடன் எப்புடியல்லாம் புறம் பேசலாம்,
8. கணவருக்கு எப்புடி அடங்காமல் நடக்கலாம்,
9. மனைவியை எப்படி அடிமை படுத்தலாம்,
10. எல்லோரையும் எப்படி பழிக்குபழி வாங்கலாம் ..
இப்படி கொலை, கொள்ளை, ஏமாற்றம், அபகரிப்பு, ஆள் கடத்தல், வஞ்சகம், என்று எல்லாத்தையும் அழகா, தெளிவா, அடிப்பிரலாமல், சொல்லி தருவதுதான் நாடகம் ( சீரியல் ) காலையில் இருந்து இரவு 11 மணிவரை இந்த சீரியலுக்கு அடிமையாகி பல பெண்கள் இருக்காங்க, குடும்பத்தில் வரும் பிரச்சனைக்கு 70 % இந்த சீரியல் தான்.. முடிந்தவரை சீரியல் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் சகோதரிகளே .. நான் எப்போதுமே சீரியல் பாக்கமாட்டேன், ( எனக்கும் சீரியல் பாக்க ஆசைதான், ஆனால் மேல சொன்ன பத்து விசயங்களும் இல்லாத ஒரு நல்ல சீரியல் இருந்தா சொல்லுங்களே

எழுதியவர் : பிதொஸ் கான் (7-Jul-15, 12:46 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 182

சிறந்த நகைச்சுவைகள்

மேலே