பணம் கொட்டும் பண்டகசாலைகள்
வேலை....
படித்தவர்க்கெல்லாம் வாய்ப்பதில்லை,
படிக்காதவர்க்கெல்லாம் வாய்க்காமலில்லை,
தகுதிக்கேற்ப
தன்வசப்படுகிறது,
வேலை....
கல்வியென்பது...
களவு போய்விட்டது,
எப்போதோ.....
சரஸ்வதியின் வாய்பொத்தி,
வீணை திருடி விற்போர்
கோடிப்பேர் இங்கே....
இன்று...
கல்வியென்பதும்,
கல்விக்கூடமென்பதும்,
பணம் ஈட்டுவதற்கான
தொழிற்சாலைகளென....
பணத்தை கொட்டி,
பணத்தை அள்ளும்
பண்டக சாலைகள்...
இன்றைய கல்விக்கூடங்கள்...
புத்தகங்களை,
அப்படியே
நகல் எடுத்தவர்களுக்கே,
நல்ல வேலையென்பது
கேள்விக்குறி....
அப்படியிருக்க....
என் மதில்மேல் பூனை
மதிப்பெண் விகிதங்கள்,
மறுக்கப்பட்டுவிடுகிறது,
அரசு தேர்வுகளில்.....
சில லட்சங்களையும்,
லட்சியங்களையும்
இழப்பதென்றால்,
பெற்றுவிடலாம்,
அயல்நாட்டில்
ஒரு அடிமைவேலை....
மற்றும்
சில லட்சங்களை
இழப்பதென்றால்,
அடைந்துவிடலாம்
ஒரு அரசுவேலை,
அரசியல்வாதியின் துணையோடு....
பிழைக்க தெரிந்தவர்கள்,
அவர்களா....?
நானா....?
தெரியவில்லை.....
இன்று....
கல்வியென்பதும்....
அரசியலென்பதும்.....
நல்ல தொழிலாகிப்போனது,
நயம்பட பேசும் திறமையுண்டு,
நாசூக்காய் ஏமாற்றும்
வழியுமுண்டு,
வேறென்ன வேண்டு்ம் இதற்கு....
முடிவெடுத்துவிட்டேன்,
அரசியலில் குதிப்பதற்கு.....
இன்னும்
பத்தாண்டுகளில்....
மாறிடுவேன்,
பத்து,பதினைந்து
கல்லூரிகளின் அதிபதியாக,
பழுத்த அரசியல்வாதியாக.....