மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி
நடைவண்டி பிடித்து நான்
நடை பழகவும்..
விரல் பிடித்து ஆனா ஆவன்னா
எழுதவும்..
கேரியரை பிடித்தோடி வந்து
சைக்கிள் ஒட்டவும்..
இடுப்பளவு குளத்து நீரில்
இரு கைகளில் எனை ஏந்தி
நீச்சல் பழகவும்..
கலப்பையின் மேழி பிடித்து
ஏரோட்டவும்..
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து
பழகவும்..
நல்ல மனிதனாய் வாழ
நன்னெறிகளை அறியவும்..
கற்றுத்தந்த என் தந்தைக்கு
யோகா கற்றுத்தர ஏற்பாடு
செய்துவிட்டேன்
முதியோர் இல்லத்தில்.