இது பூக்களின் விளையாட்டு

சூரியகாந்தி பூவே ஓடிவந்து கிள்ளிப் போ
வாடாமல்லிப் பூவே ஓடிவந்து கிள்ளிப் போ
கனகாம்பர பூவே ஓடிவந்து கிள்ளிப் போ
.
.
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒருப் பூ பூத்துச்சாம்...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டுப் பூ பூத்துச்சாம்...
மூனு குடம் தண்ணி ஊத்தி
மூனுப் பூ பூத்துச்சாம்...
.
இது
பூக்களின் பெயர் சொல்லும் விளையாட்டல்ல
.
இது புவியில்
"பூக்களே சேர்ந்து விளையாடிய விளையாட்டுக்கள்"

எழுதியவர் : மணி அமரன் (7-Jul-15, 4:28 pm)
பார்வை : 139

மேலே