இவர்கள் யார்

குடும்பம் இருந்தும்
குப்பைகளாய் வீதிகளில்
கோணிபைகளை போர்வைகளாய்
கந்தல் ஆடைகளை உடையாய்

ஏமாற்றங்கள் நிறைந்தவர்கள்
எதனால் இந்நிலையில்
உடன்பிறப்புகள் இல்லையோ ?
உருத்துகள் தான் இல்லையோ ?

புத்தி பேதலித்ததானால்
தெருவோர பிணங்களோ ?
தெருவோரம் வந்ததனால்
புத்தி பேதலித்ததுவோ?

பசியினால் பாதி உயிர்
பிணியினால் பாதி உயிர்
பிணங்களாய் சாலையோரத்து
நாய்களுக்கு உணவாய்

எத்தனை ஆசிரமங்கள் இருந்தும்
ஏன் இவர்கள் இந்நிலையில்
மனநோய் மருத்துவமனைகள்
மயானம் ஆகிவிட்டதா இவர்கட்கு

மானிட பிறவிகளே
உறவுக்கு மரியாதை செய்யுங்கள்
உதறிவிடாதீர்கள் வீதிக்கு
உதாசினப்படுத்தாதீர்கள் எவரையும்

அனைவர் மீதும் அன்பாய் இருங்கள்
அனைத்து சுகபோகங்களும்
அழியாது தொடரும் உம்
வாழ்நாள் முழுதும்

அநாதை பிணங்கள் குறையும்
முதியோர் இல்லம் குறையும்
முழுமை பெரும் நாடு
சாலைகளும் சலனமின்றி துயிலும்

எழுதியவர் : வேலணையூர் சசிவா (8-Jul-15, 2:48 pm)
Tanglish : ivargal yaar
பார்வை : 73

மேலே