பத்ரகிரியார் புலம்பல்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம் ?


ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் ?


சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து
பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம் ?


ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம்?


மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்?


ஆடுகின்ற சூத்திரம் தான் அருமளவு மேதிரிந்து
போடுகின்ற நாள் வருமுன் போற்றுவதும் எக்காலம்?

எழுதியவர் : பத்ரகிரியார் (8-Jul-15, 2:44 pm)
பார்வை : 283

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே