வாழ்கை

தோழமை மனைவியும்
தோளில் சுமந்த பிள்ளையும்
ஒட்டிக்கொண்டிருந்த உறவும்
ஒதுங்கி ஒவ்வாமையோடு
ஒப்பாரி வைக்கிறது - ஒவ்வோர் மரணத்திலும் .........

காசும் பணம்
கட்டு கட்டாய் இருந்தும்
ஒற்றை நாணயத்தோடு ஓர்
இறுதி ஊர்வலம் ..........

காணும் இடமெல்லாம்
காணிகள் சொந்தமாகும்
கடைசி இருப்பென்னவோ
ஆறடிக்குழியே ............

வெத்து விளம்பரமெல்லாம்
வீதியில் நிறைந்திருக்கும்
செத்த பின்புதானே
சேதிகள் பிரசுவிக்கும் ............

மனித பிறப்பது
உருவத்தை ஓத்ததில்லை
உள்ளத்தால் சிறந்தவர்கள்
ஓர்நாளும் செத்ததில்லை ..........

வாழும் வரையில் பணத்தை மதிக்காமல் மனத்தை மதிப்போம் *மனிதனாய் வாழ்வோம்

கவிஞர் சுந்தர வினாயகமுருகன்

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Jul-15, 1:44 pm)
Tanglish : vaazhkai
பார்வை : 135

மேலே