பிஞ்சு நெஞ்சில் நஞ்சு கட்டுரை

*
தமிழ்செய்தி செனல்களில் சில தினங்களுக்கு முன்னர் நான்கு வயது சிறுவர்களை மது குடிக்க வைத்து, அவர்களின் உறவினர்கள் ரசித்தக் காட்சிகள் ஒலிப்பரப்பாகி, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியுள்ளாக்க வைத்து பலரின் உள்ளங்களை உறைய வைத்தன. இதுபோன்ற சம்பங்கள் எங்கேனும் நடந்துக் கொண்டு தானிருக்கின்றன என்பதற்கு இக்காட்சித் தொகுப்புகள் சான்றாகும். மதுவை ஒழிக்க வேண்டுமென்ற குரல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அது செவிடன் காதில் ஊதியச் சங்கொலியாகத் தானிருக்கின்றது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் இளம் தலைமுறை சீரழிந்து வருகின்றது என்கின்ற சம்பவங்களை புள்ளி விவரங்களோடு சமூகஆர்வலர்கள் எடுத்துக் கூறிளாலும், அதொரு புலம்பலாகவே தெரிகின்றது. மது விற்பனையை கருவூலத்தை நிரப்பும் வருவாய்த் துறையாகவே வைத்திருக்கின்றது அரசு மது வருமானத்தை வைத்துத் தான் ஏழைமக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி வருகின்றது. இவ்வருமானம் இழந்தால் அரசு இலவசங்கள் மடடுமல்ல, சிலபல திட்டங்களையும் அரசு நிறைவேற்ற முடியாது. என்பதே நிதர்சன உண்மையாகும். மது ஒழிப்பு நடக்குமா? மக்கள் ஒழிப்பு தான் நடக்குமா? அரசுக்கு வருவாய் தான் முக்கியமே ஒழிய மக்கள் வாழ்வாதாரம் முக்கியமில்லை என்கின்ற நிலை நீடித்தால் பண்பட்ட மனித சமுதாயம் காண்பதே அரிதாகிவிடும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (9-Jul-15, 9:41 am)
பார்வை : 545

மேலே