பெண்ணியம் பேசுவோம்
![](https://eluthu.com/images/loading.gif)
கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியும் பெண்ணின் மனதின் ஆழத்தை அளந்திட முடியாது என்கிற பேச்சு உண்டு ....ஆம் அது உண்மைதான் இதில் விந்தை என்னவென்றால் ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணாலும் அளவிட முடியாது
அவள் எதற்கு சிரிப்பாள் எதற்கு அழுவாள் என்று அவளுக்கே தெரியாது அழ வேண்டிய நேரத்தில் சிரிக்கவும் செய்வாள் சிரிக்க வேண்டிய நேரத்தில் மௌனமாகவும் இருப்பாள்,,,,,
சில நேரங்களில் பெண் என்ற ஆணவமும் உண்டு பல நேரங்களில் நாம் பெண்தானே என்ற அடக்கமும் உண்டு .....ஆண்களை கண்டு எரிச்சல் கொள்வதும் உண்டு பொறமை கொள்வதும் உண்டு
ஐம்புலன்களையும் அடக்கி ஆள ஒரு பெண்ணால் மட்டுமே முடியும் அதுவே இரு பெண்கள் ஒன்றாய் சேர்ந்து விட்டால் போச்சி பச்சரசி மாவில் இருந்து பாராளுமன்றம் வரை பேசி தீர்த்து விடுவார்கள்
கோவமும் ஒரு உணர்வுதான் அதை வெளிக்காட்டுவதில் தவறு ஒன்றும் இல்லை என்பது
என் கருத்து ...என்னை பொறுத்தவரையில் அதிகபடியான கோவம்தான் அவளின் உண்மை நிலையை
எடுத்து உரைக்கும் .....தன்னையும் தன்னை சார்ந்த இடத்தையும் நேரத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ள பெண்ணால் மட்டுமே முடிந்தது ,
தாயாக,தாரமாக,மகளாக,மருமகளாக,தோழியாக,காதலியாக அவள் கடமைகளை அவள் செய்து கொண்டேதான் இருக்கிறாள்