முத்தொள்ளாயிரம் - கடவுள் வாழ்த்து - நேரிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
கடவுள் வாழ்த்து
நேரிசை வெண்பா
மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் – பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்(று) அயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு! 1
மன்னிய - நிலையாக இருக்கின்ற;
ஆதிரை - திருஆதிரை என்னும் நட்சத்திரம்,
ஆகின்ற திரை (அலை);
அயரும் - கொண்டாடும்; ஊர் - உலாவு
பொருளுரை:
என்றும் நிலைபெற்றிருக்கும் விண்மீன்கள், நிலா (மதியம்), கனலும் கதிரவன் என்று இவற்றையெல்லாம் முதன்முதலில் படைத்த முதல்வனைப்
பின்னரும் ஆதிரையான் (திருவாதிரை நாளுக்கு உரிய சிவன்) என்றும், ஆதிரையான் (ஆ திரையான் ஆகி, வளரும் கடலின் அலைத்திரையில் பள்ளி கொண்டிருக்கும் திருமால்) என்றும் உலாவும் அலைகளைக்கொண்ட கடலை வேலியாக உடைய உலகில் வாழும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
நாண்மீன்[1] - நாள்மீன் அதாவது அசுவினி முதலான 27 நட்சத்திரங்கள்.