திரும்பிப் பார்க்கிறேன் கவித்தென்றல் அநூர்ஜஹான் மதுரை மாவட்ட ம்
"திரும்பிப் பார்க்கிறேன்"' கவித்தென்றல் அ.நூர்ஜஹான் மதுரை மாவட்ட ம்
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. பக்கங்கள் : 78, விலை : ரூ. 70.
முத்தமிழ் இலக்கிய மன்றம் நிறுவனர் திருச்சி சந்தர் ஐயா !!எழுத்தாளர் கர்ணன் ஐயா! அவர்களின் தமிழ் எழுச்சி பட்டறையில் எழுதத் தொடங்கியவள்! நான் என் ஆசான்கள் தயவால் மதுரை கவிஞர்களோடு இணைந்து தமிழை சுவாசித்து எழுதத் தொடங்கிய காலம் அது!!இன்று வரை வானொலி பத்திரிகை, கவியரங்கங்கள் பட்டிமன்றங்கள் என என் தமிழப்பணி ஆசிரியப்பணியோடு
தொடர்கிறது என்பதில் பெருமை கொள்கிறேன் !!
மதுரை மண்ணிற்கு சொந்தமான கவிஞர்களை ஒன்றிணைத்து முத்தமிழ் அறக்கட்டளை தலைவர் ஐயா திருச்சி சந்தர் அவர்கள் !குஜராத் சமாஜத்தில் கவியரங்கங்கள் பட்டிமன்றங்கள் என நடத்துவதுண்டு !அப்பொழுதுதான் ஐயா அவர்களுடைய கவிதைகளை நான் கேட்டகும் வாய்ப்பு கிடைத்தது! எளிய நடையில் சீரிய கருத்துக்களை விதை நெல்மணியென, வீரியமுள்ள சொற்களை விதைப்பவர்! கவிஞர் ஹைக்கூ இரவி ஐயா அவர்கள் !!கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகால பயணம் அவர் வெளியிட்ட "என்னவள் 'நூலினை படித்து என் இளைய மகள் அவருக்கு ஒரு பக்க அளவில் தன் கருத்துகளை பதிவு செய்து இருந்தால் !!இன்றைய இளைய சமுதாயத்திற்கு கூட இவருடைய எழுத்துக்கள் பிடிக்கும் !ஆனால் என் மகள் எழுதிய அந்த அந்த பதிவை ஐயா அவர்களிடம் கொடுக்க வாய்ப்பே இல்லாமல் போனது!! காரணம் என் பணி சூழல் !தினம் திருச்சுழி சென்று பயணித்து வேலை பார்த்து வந்ததால் சில சமயங்களில் என்னால் ஐயா அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது !!தற்சமயம் மதுரை அரசின் மேல்நிலைப் பள்ளியில் பணியேற்று உள்ளதால் மீண்டும் என் தமிழ் பணிக்கு ஒரு புத்துயிப்பு வந்துள்ளது!! என்பதுதான் உண்மை
கவிஞர் ரவி ஐயா அவர்கள் !ஒரு லட்சிய புருஷர் ,,என்றே நான் சொல்வேன் !!ஏனென்றால் நற்குணங்கள் ஒருங்கே பெற்றவர் அவர் கவிஞர் ஒரு நல்ல மகனாக ,கணவனாக ,நல்ல தந்தையாக ,நல்ல நண்பனாக ,பொறுமை ,அன்பு ,மரியாதை ,இரக்கம் ,சீரீய ஆற்றல் போன்ற நற்பண்புகளை ஒருங்கே அமையப் பெற்றவர் !!தனது வாழ்க்கை பயணத்தில் தனிப்பட்ட மனிதனாக இல்லாமல் !குடும்பம் சமூகம், தமிழ் உணர்வு ,மற்றவர்களுக்கு உதவும் அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர் !!இதனால் தான் இவர் மிகச்சிறந்த ஆளுமை பெற்ற மாமனிதர்கள் பாராட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றார்!!
உச்சத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை எச்சமாக பார்க்கும் காலத்தில் !எல்லோரையும் முன்னிலை படுத்த வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் கொண்டவர் !! தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது மற்றும் பல்வேறு அமைப்புகளில் பல விருதுகளை பெற்றிருந்தாலும் !!எப்போதும் பெருமை என்னும் செருக்கு அணியாதவர் !கவிஞர் இரா இரவி அவர்கள் இவர் கவிஞர் மட்டுமல்ல கனிந்த அன்பிற்கும் நட்பிற்கும் சொந்தக்காரர் !!
கவிஞர் அவர்கள் பொறுப்பான அரசு பணியில் ஈடுபாட்டோடு வேலை பார்ப்பது மட்டுமின்றி தனக்கு கிடைத்த நேரத்தில் எல்லாம் !ஏன்)?? எங்கெங்கு தமிழ் முழக்கம் கேட்கிறதோ அங்கெல்லாம் அவர் இருப்பார் !!தமிழ் வளர்க்கும் சீரிய பணியை செம்மையாக செய்தவர் !!இவரால் எப்படி முடிகிறது சதா !!காலம் நேரம் பார்க்காமல், ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு மாமனிதர் இவர் பூம்புனல் ,கருத்துக்களின் கருவூலம் !! துளிர்க்கும் இலைக்கும் கவி பாடுவார் சருகி உதிரும் இலைக்கும் கவி பாடுவார் !!இளைப்பாறல் என்பது அரிதினும் அரிது!
தங்கம் கண்ட மதுரையில் எத்தனையோ எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள் !!அந்த வரிசையில் சாமானியராக சரித்திரம் படைப்பவராக ஹைக்கூ இரா இரவி அவர்கள் மதுரையின் அடையாளமாக திகழ்கிறார் என்பதே நிதர்சனம் !!இவருடைய படைப்பு நூல்கள் 32 முடிவடைந்து 33 வது நூலில் அடி எடுத்து வைக்கிறது!!
ஆம் 33 வது நூல் வெற்றிகரமாக உங்கள் கையில் தவழ வருகிறது அதற்கு முன் மதிப்புரைக்காக என் கரங்களில் இந்த நூல் !!தலைப்பு "திரும்பிப் பார்க்கின்றேன் "அழகான தலைப்பு ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளை தன் தடத்தை நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும் !அப்படி பார்க்கும் பொழுது இதுவரை சரியாக வந்திருக்கின்றோமா !!என்பதை சுயபரிசோதனை நம்மை நாமே செய்து கொள்ள முடியும்!! அந்த வகையில் கவிஞர் அவர்கள் தன்னுடைய பாதையை வந்த வழியை திரும்பி பார்க்கிறார் !எப்படிப்பட்ட பாதை பிரமிக்க வைக்கிறது ??!எப்படிப்பட்ட ஆளுமைகள்!! இவருடைய நட்புகளாக இருக்கிறார்கள்
அன்றே சொல்லி இருக்கிறார்கள் உன்னை அறிய வேண்டுமா உன் தோழமையை காட்டு என்று! இங்கு நீங்கள் பதிவிட்டிருக்கும் இந்த ஆளுமைகள் 46 பேர் இவர்களில் பாதிக்கு மேல் எனக்கு தெரிந்திருந்தாலும் இவர்களுடன் உங்களுடைய பயணம் நீங்கள் குறித்த விஷயங்களை பார்க்கும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது !!எதை சொல்வது எதை விடுப்பது ஒவ்வொருவரை பற்றியும் ஒரு நிகழ்வோடு சுவைபட எடுத்து இயம்பியிருக்கிறார்! இந்த நூல் அழகான நடையில் நிகழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார் கவிஞர் !!!
. இந்நூலில் அணிந்துரை வழங்கிய நல் ஆசான் கவிதை உறவு ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஐயா அவர்கள் !!கவிஞர் இரா இரவி ஐயா அவர்களை பற்றி "எது கண்ணில் பட்டாலும் எழுத்தாக்கி விடுகின்ற இயல்பு"என்று பெருமைப்படுத்தி இருக்கிறார் !!இவை முற்றிலும் உண்மை !!! எழுத்தாளனுக்கு உற்று நோக்கல் அவசியம் தானே இது கவிஞருக்கு கைவந்த கலை
. கவிஞர் ஹைக்கூ ரவி அவர்கள் தன்னுறையில் கூட ஒருவரையும் தவறவிடாமல் இந்த நூல் பதிவிட உதவிய பதிப்பகத்தார்கள் அணிந்துரை நல்கியோர், வடிவமைப்பாளர்கள் !!அதேபோல் 2022 ஆம் ஆண்டு தமிழ் செம்மல் விருது வழங்கி பாராட்டிய தமிழக அரசின் முதல்வர் ஐயா அவர்களையும் !!அமைச்சர் அவர்களையும்நினைவுகூர்ந்து !பாராட்டியிருக்கிறார் நன்றி பாராட்டுதல் என்பது தமிழனின் உயர் பண்பு தானே!!
நூலுக்குள்ளே செல்லும்போது ஒவ்வொரு வரியிலும் அவரின் எழுத்துக்கள் சுடர்விடுகிறது!பணியில் சேர்ந்த நாள் முதல் அவர் வளர்ந்து வந்த பாதையை நம்மோடு பகிர்ந்து கொண்டு நிறைவு கொள்கிறார் !!இவர் நினைவில் வரும் மனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல!! மிகப் பெரிய விருட்சங்கள் முன்னாள் குடியரசுத் தலைவரிடம் இவர் கடிதம் மூலம் கொண்ட நட்பை வளர்த்து தன்னுடைய இரண்டு நூலுக்கு மதிப்பினை வாங்கி இருக்கிறார் என்றால் !!!அதற்காக இவருடைய முயற்சி எவ்வளவாக இருந்திருக்கும்! !!எந்த அளவு அவர் மனதில் இவர் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தால் அவர் இரண்டு நூலுக்கு மதிப்புரை வழங்கி இருப்பார் !!அது மட்டுமல்ல முது முனைவர் வெ. இறையன்பு ஐயா அவர்களோடு இவருடைய பயணம் எப்படி தொடங்கியது மேதகு முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கும் முது முனைவர் இறையன்பு ஐயா அவர்களுக்கும் இடையில் பாலமாக இருந்து முனைவர் ஐயா நூல்களை மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் கொண்டு செலுத்தி நற்பெயர் பெற்றவர் மேலூம் இரு பெரும் ஆளுமைகளுக்கு ம் பாலமாக இருந்தவர் இது லேசான காரியம் அல்ல !!இந்த காரியம் எளிதானதா!! இதை அவரே பதிவு செய்து இருக்கிறார் அந்த சுவராசியமான நிகழ்வை நூலில் படித்து அறிந்து கொள்ளுங்கள்!!அதை வாசிக்கும் பொழுது நான் பிரமிப்படைந்தேன் கவிஞரை நெஞ்சார வாழ்த்தினேன் !!
கவிஞர் ஐயா ஆ. மணிவண்ணன் அவர்கள் பற்றியும், கவிஞர் கவிமாமணி வீரபாண்டிய தென்னவன் அவர்களைப் பற்றியும் ,தமிழ் சுடர் மோகன் ஐயா அவருடைய துணைவியார் முனைவர் தமிழ் சுடர் நிர்மலா மோகன் அம்மா போன்ற ஆகச்சிறந்த ஆளுமைகளோடு இவர் பயணம் செய்ததை இங்கே அழகாக பதிவிட்டுள்ளார்
அதுமட்டுமல்ல இன்றைய நாளில் நம்முடைய எல்லா கவிஞர்களுக்கும் !கவி அரங்கம் நடத்தவும் வேடந்தாங்களாக விளங்கும் ""மணியம்மை மழலையர் பள்ளி ''அதன் தாளாளர் ஐயா வரதராசன் ஐயா பெரியார் நெறியாளர் இவர்களைப் பற்றியும் இவர் மிக அருமையாக பதிவிட்டுள்ளார்
தன்னை பகுத்தறிவு பாதைக்கு மடைமாற்றி நெறிப்படுத்தி ஒழுக்கமான வாழ்வை கற்பித்தவர் என்றும்!இன்றுவரை நான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்வதற்கு அவர்தான் காரணம் என்றும்!ஐயப்பன் கோயிலில் பஜனை பாடி வந்த என்னை அழைத்து !பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துச் சொல்லி !தந்தைபெரியார் நூல்களை வழங்கி !!படிக்க வைத்து என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் என்று நெகிழ்வுடன் அவரை நினைவு கூறுகிறார் !!இதை வாசிக்கும் பொழுது நெஞ்சம் நெகிழ்கிறது !!ஒவ்வொருவரை பற்றியும் மிகச்சிறப்பாக தன்னோடு பயணித்த நாட்களை அருமையாக நினைவு கூர்ந்து உள்ளார்!! கவிஞர் இரா ரவி ஐயா அவர்கள் இன்னும் ஒவ்வொருவரை பற்றியும் அவர் பதிவிட்ட விசயங்களை முழுவதாமாக இங்கே பதிவிட்டால் நூலில் படித்த அறிவது எப்படி ???
"திரும்பிப் பார்க்கிறேன்"' அற்புத நூலின் உள்ள எல்லா மாமனிதர்களை பற்றி கவிஞர் இரவி ஐயா பதிவிட்டதை நான் இங்கே பதிவிட்டால் திரும்பிப் பார்க்கிறேன் அற்புத நூலின் மதிப்புரையே ஒரு நூலாகிவிடும் !!எனவே கவிஞர்களின் ஆகச்சிறந்த ஆளுமைகளோடு அவர் பயணம் தொடர்ந்த சுவையான நிகழ்வுகளை !!வாசகர்கள் நீங்கள் வாசித்து சுவைக்க !!உங்களிடமே விட்டுவிடுகின்றேன் !கவிஞர் ஹைக்கூ இரா இரவியின் எண்ணங்களில் உதயமான உதய நிலவு "திரும்பிப் பார்க்கின்றேன்" என்னும் நூல் அற்புத நூல் காலமெல்லாம் கவிஞர் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும
இவருக்கு ஊறுதுணையாக இருக்கும் இவர் மனைவி ஜெயசித்ரா அம்மா அவர்களை வணங்குகிறேன் இன்னும் பல நூல் வெளியிட்டு மத்திய அரசின் விருதும் பெற எல்லாம் வல்லோன் இறைவனை பணிகிறேன் 🌹🌹🌹🌹🌹
நன்றி வணக்கம்
**************""""
கவித்தென்றல் அ.நூர்ஜஹான் மதுரை மாவட்ட ம்