பாசத்தின் சுமை
பாசத்தின் சுமை இதயத்தை வருடி கொண்டே இருக்கும்
அது ஒரு வலி நிறைந்த சுகம்
நம்மை கவலைப்பட வைப்பதும்
சுகப்பட வைப்பதும் பாசம் என்னும் சுமையே
ஒருவர் மீது அளவுக்கு மீறிய அன்பும் நம்பிக்கையும்
வைப்பது தான் பாசம் எனும் சுகம்
பாசம் நம்மை ஆனந்தம் கொள்ள செய்யும்
அழிக்க முடியா ஆழமான ரேகையாக
நம் உள்ளத்தில் பதிந்து விடும்
பசுமையான சுகம் மனதை இலேசாக வருடும் சுகம்
என்ன விலை கொடுத்தும் பெற்றிட முடியா சுகம்
எல்லோரும் பாசம் எனும் சுகம் அனுபவித்திருப்பார்கள்
ஆனால் ஒரு சிலரால் மட்டுமே முழுமையாக உணர முடியும்
அது அவர்களின் ஆயுள் முழுவதும் அழியா சொத்து
பாசத்தை அனுபவித்து அதற்காக ஏங்கும் சுகமே
பாசம் எனும் சுமையாக மாறுகிறது
அதுதான் பாசத்தின் சுகமும் சுமையும்
எங்கு சென்றாலும் அதே சிந்தனை
பாசம் கொண்ட உள்ளம்
பாசம் நிரம்பிய பள்ளமாகவே மாறி விடும்
வெள்ளை மனம் அது பாசத்தின் ஊற்றாகும்
பாசம் மனிதனை பித்தனாக்கி விடும்
வேஷமும் சுயநலமும் பாசத்தில் இல்லை
பாசம் பளிங்கு போன்றது