எச்சிலைச் செரிக்கப் பழகும் வயிறு

இலை எடுக்கும் போது
பெருகும் எச்சில் ,
உணவு மேசையில்
வடிந்துவிடாது இருக்க,
விழுங்கிக் கொண்டே இருந்ததில்...
உணவு வேளைக்குப் பின் கொடுக்கப்பட்ட
சாம்பார் ஊற்றிய சாதத்திற்கு முன்னமே
எச்சிலை உணவாகச்
செரிக்கப் பழகியிருந்தது வயிறு.