நிலவே நிலவே

நீண்ட யுகங்களாகவே
வெகு கோபத்தில் இருக்கிறது நிலா..

இனம் மொழி மதம் கடந்து
எல்லாப் பெண்களுக்கும் முகமூடியாவதைப்
பொறுத்தாலும்....
முகமூடிகள்மீது உமிழப்படும்
சாராய வாடைகளைத்தான்
சகித்துக்கொள்ளவே முடியவில்லை...

இதற்கிடையில் நிர்வாணப்படுத்தி
ஆடைகட்டிப் பார்க்கும்
அபத்தங்களும் அரங்கேற....

நாளக் கூத்துகளுக்கு
அதனைக் காதலர்கள் மூன்று
புள்ளி ஆச்சரியக் குறிகளோடு
பந்தியிட்டுக் கொண்டிருந்தார்கள்..

பந்தியிலிருந்து பொறுக்கிய
நவீனச் சிந்தனையாளன் ஒருவன்
எப்படியும் ஒரு
சிப்பைப் பொருத்திவிட துளை
தேடிக் கொண்டிருந்தான்...

முழுதாய்த் தெரிந்தும்
சொல்லடி அபிராமிஎன ஒருவன்
முறையிட்டிருக்க.....

பேசாமல் அபிராமிக்கு
மூக்குத்தியாகிவிடலாமா
என யோசித்துக் கொண்டிருந்தது
நிலா...

எழுதியவர் : கட்டாரி (9-Jul-15, 12:44 pm)
Tanglish : nilave nilave
பார்வை : 118

மேலே