ஒரு நாள் வாழ்க்கை

செம்மண் புழுதிக் குள் செருப்பு யில்லாமல்
ஞாயிறுஅவண் ஓய்வில் லாஒளிகதிர் வீச
பறந்த புட்கள்பனை மர நிழல்தேட
பசியறியா மாந்தர் நாங்கள் நிழல் தேடினால்
தன்பெண்டுகள் வெயிலரியுமோ என்ற அச்சத்தில்
உழைத்துக்கொண்டே யிருக்கிறோம்
இன்றும் அதே கரிசல் காட்டில்.........

-----------------------------------------------------------------------
வெந்த மண்ணில் வெறுங்கால் ஊண்றீ
விளைந்த உப்பை வியர்வையோடு இழுத்து
கதிரவனுக்கு கருந்தோல் கொடுத்து

கரைக்கு உப்பு இழுத்தால் ........................!

கல் உப்பு என்று கருணையில்லா விலைகேட்பர்
கஷ்டம் தான் !
என்ன செய்வது
பசிக்குதே ?

ஒரு ஜான் வயித்துக்கு
ஒரு நாள் உழைத்தால் தான்
அரை ஜான் வயிராவது நிறையும் என் ஊர் மக்களுக்கு
-----------------------------------------------------------------------------
கண்ணீருக்கும் வியர்வைக்கும் வித்தியாசம் தெரியாது
உப்பு நீரில் நாங்கள் வாழ்வதால்..................

என் ஊர் :மடத்தாக்குளம்
மாவட்டம் : இராமநாதபுரம்

மடந்தை ஜெபக்குமார்

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (9-Jul-15, 12:36 pm)
Tanglish : oru naal vaazhkkai
பார்வை : 311

மேலே