மாற்றம்
மாற்றமில்லா மாற்றமே..
இன்பத்தை மனதில் ஏற்றிடும் கணமே
ஆழி பேரலையாய் துன்பத்தில் உழல வைக்கிறாய்
உன் பாவக்கணக்கு மட்டும்
பத்திரபடுத்த படவில்லை போலும்..
அதனால்தான்
உனக்கு மட்டும் மரணம் இல்லை..
அழகு அசிங்கமாகி விட்டது - குணத்தில்(உதவுபவன் ஏமாளியாம்)
அசிங்கம் அந்தஸ்தாகி விட்டது-பழக்கவழக்கத்தில்(புகை,மது தகுதியாம்)
பட்டம் பாடம் கற்பித்துவிட்டது- வேலையில்(சிபாரிசு சிறப்பாம்)
யாம் காணாத மாற்றம் ஒன்றுமட்டுமே..
பிடுங்கி தின்றவன் செல்வந்தன் ஆகிவிட்டான்..
வயலில் நீர் விட்டவன் மட்டும்
வறுமைக்கு உரமாகி விட்டான்..