கவிஞன்

கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................

எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................

கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................

கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
........................................................................

கண் முன்னே நிகர் இருப்பினும்
தனக்கு நிகர் யார் ...........?
எனபது கவிஞனின்
கவியிலும் எழாத கற்பனை
.......................................................................

உலகே நிலையில்லை
என உணர்ந்தாலும் கவிஞன்
உள்ளே ஒரு சுமை
கொண்டே வாழ்கிறான்
......................................................................

நால்வரின் மத்தியிலும்
ஏதோ ஒரு
நால்வரிகளில் தான்
தவழ்கிறான்
....................................................................

காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான்
..................................................................

இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்
.................................................................

- கவிஞன்

எழுதியவர் : கவியரசன் (9-Jul-15, 2:04 pm)
Tanglish : kavingan
பார்வை : 185

மேலே