மின்னலில் ஓர் பௌர்ணமி 555

உயிரே...

மௌனத்தை உடைத்தது
மொட்டுக்கள்...

நீ என்னிடம்
பேசிவிட்டாய்...

வட்டமிடுகிறது
வண்ணத்து பூச்சி...

நீ என்னை பார்த்து
இமைத்துவிட்டாய்...

நதியெல்லாம் சிவந்தது
நீ வெட்கபடுகிறாய்...

பகலில் ஓர் பௌர்ணமி
நீ வருகிறாய்...

மரங்களெல்லாம் தலையசைகிறது
நீ என்னை கொஞ்சுகிறாய்...

விண்ணும் பூ தூவும்
நாம் கைகோர்த்தால்...

மின்னலில் ஓர்
பௌர்ணமியாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Jul-15, 6:41 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 89

மேலே