யாதும் நிறைந்த நாள் - உதயா

பூக்கள் பூக்கும் சத்தத்தைப் போல
தென்றல் பாடும் கானம் போல
அழகாய் பேசும் நிலவைப் போல
யாதும் நிறைந்தது அந்த நாள்

காற்று வெளியில் அசைந்து அசைந்து
ஒற்றையடி பாதையில் தரையிறங்கும் இறகைப் போல
அவள் நட்டநடு வெயிலில் கானல் நீரில் தத்தளித்து
என்னை நோக்கி வந்தாள்

சற்றுமுன் மலர்ந்த மலரைப் போல
ஒரு போனினை கையில் வைத்துக் கொண்டு
தோய்ந்த முகத்தோடு என்னை
அய்யா அய்யா என்று அழைத்தாள்.

தனது கோட்டைக்குள் நுழைந்த பகைவனை
தனது எல்லை வரை துரத்தும் அரசனைப் போல
என் விழிப் பார்வை எட்டும் தூரம் வரை
என் தாயினை தேடி அலைந்தேன்

அய்யா என்று அவள் என்னையும்
தனது மகனாக எண்ணிதான் அழைத்தாளா?
எத்துனை அன்பு பாசம் அச்சொல்லில் ஒருகணம் வியந்து
அவல் முகத்தில் என் தாயினையும் கண்டேன்

தந்தை வாங்கி கொடுத்த புது பொம்மையைப் பற்றி
தோழமைகளோடு முகத்தை வளைத்துப் பேசும் குழந்தைப் போல
இது என் ராசா வாங்கி கொடுத்த போன் என்று அவள்
பெருமிதத்துடன் குழந்தைப் போலவே சொன்னாள்

அய்யா இதுல எப்படி பேசுறது என்றாள்
அம்மா இதுல இருக்கிற பச்சை பொத்தானை
அமுக்கினால் பேசணும் சிகப்பு பொத்தானை
அமுக்கினால் கட் பண்றது என்றேன்

அய்யா அய்யா என் ராசா வெளி நாட்டுல இருக்கான்
மாதம் ஒரு முறை போன் பண்ணுவா
இரண்டு மாதம் ஆச்சு போன் பண்ணவே இல்லை
எப்போதாவது பண்ணி இருக்கான கொஞ்சம் பாரு என்றாள்

நான் போனினை வாங்கி பார்த்தேன்
அவன் அழைக்கவே வில்லை
நான் அவளிடம் பொய் உரைத்தேன்
ஒரு முறை பண்ணி இருக்கான் என்று

என் ராசா பண்ணி இருக்கானா
என் ராச பண்ணி இருக்கானா
எவ்வளவு மகிழ்ச்சி அவள் முகத்தில்
நான் ஒரு கணம் ஊமையாகிவிட்டேன்

அம்மா சாப்பாடு எதனா சாப்டீங்களா என்றேன்
எங்க அய்யா சாபுடுறது? என்னோட ராசா
சாப்டானோ இல்லையோ அவன நெனைச்சா
சாப்பாடும் இறங்கல எனறாள்

அம்மா நல்லா சாப்டாதானே உங்க ராசா வந்தா
கட்டிப் பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்
அந்த தாய் அழுது விட்டாள்
அப்படியா சொல்லுற இனிமே சாபுடுறேன் என்றாள்

எனக்கு அழுகை வந்துவிட்டது........

(((( வெளிநாடு மற்றும் வெளி ஊரில் வாழும் தோழர் மற்றும் தோழிகளே உங்கள் தாயிடம் பேசுங்கள், அவள் அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.
அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான் .))))

எழுதியவர் : உதயா (9-Jul-15, 8:31 pm)
பார்வை : 166

மேலே