மெய் எழும்

திறமை இருந்தால் போதும் என்று நிமிர்ந்தேன்
பரிந்துரையே போதும் என உலகியல் காட்டியது
உழைப்பே உயர்வு தரும் என விரும்பி உழைத்தேன்
குறுக்குவழி மிக எளிது என பார் காண்பித்து
விடாமுயற்சி வெற்றிதரும் என விடாமல் முயன்றேன்
செல்வமிருந்தால் ஆமையும் வெல்லும் என புவி உணர்த்தியது
ஆயின், இருளுகுப்பின் ஒளி,சந்திரனுக்குப் பின் பகலவன்
சிற்பியின் உள்ளிருந்து முத்து,தேன் கூட்டில்லிருந்து தேன்,
இவை போன்று பல தடைகளைக் கடந்து மெய் எழும்!
ஆழிப்பேரலை போன்று!!