செந்தூரப்பூ
கரையான்கள்
தூக்கிப்போட்ட
மரத்தாள்களில்
மறையாதிருந்த
எழுத்துகளைப் படித்து
எழுதியது இந்தக் கவிதை.
கனம் பொருந்திய கனவான்களே
உங்களின் இரத்தவகைகளை
இங்கு தேடாதீர்கள்
இது
நெல்லுக்கு முகவிரி இட்டு
வயலுக்கு அனுப்பிய வியர்வைச் சரம்.
இது -
கல்லுக்கு முகவரி இட்டு
சிலைக்கு அனுப்பிய புலமையின் கரம் .
அகழிச் சிறைகளை ஆழப்டுத்தி
தவ மோனங்களை முறிக்கும்
தத்துவக் கைதிகளின்
காலகால காப்பீட்டு இல்லமென்று
இதைச் சொல்லிக் கொள்ளுங்கள்
இனியாரேனும் உங்களிடம்
கவிதையென்று தந்தால்
கொஞ்சம் பஞ்சோடு உரசிப் பாருங்கள்
ஒருவேளை தீப்பிடிக்க கூடும் ....
ஏனனில் -
ஏதோ ஒரு ரூபத்தில்
எங்கோ ஒரு மூலையில்
இப்போதும் பிறக்கிறார்கள்
சன் யாட் சென்னும்
சோவியத்து லெனினும்.
காய்ந்த ரொட்டிக்கும்
கப் தேநீருக்குமான போராட்டம்
காலங்களையும்தாண்டி போகிறது .
கவலைப்படாத என்மனமோ
கனவுக்கன்னி நடிகையின் சினிமா
என்றைக்கு வெள்ளிவிழா என்று
எப்போதும் கணக்கு பார்க்கிறது..