பெண்களை பற்றி பார்ப்போமா

பெண்களை பற்றி பார்ப்போமா

பெண் இன்றிப் பெருமையும் இல்லை: கண் இன்றிக் காட்சியும் இல்லை.

பெண் கிளை, பெருங்கிளை.

பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

பெண்ணுக்கு பொன் இட்டுப் பார்.

பெண் பாவம் பொல்லாதது.

பெண் வாழ, பிறந்தகம் மகிழும்

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு-

சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்-

பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.-

காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்-.

அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது-

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபிட்சம் அடையாது -

பெண்களின் கண்ணீரே உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி-.

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்-

பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது
Basheer Appa's photo.

எழுதியவர் : பிதொஸ் கான் (10-Jul-15, 3:46 pm)
பார்வை : 2306

மேலே