பதவி விலா
ஒருத்தர் புதுசா மேனேஜரா பதவியேற்றார். அப்ப பழைய மேனேஜர் அவர் கிட்ட 3 கவர் குடுத்தார். உனக்கு ரொம்ப பிரச்சனை வந்தால் இதை வரிசையா எடுத்துப்பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.
அந்த மேனேஜர் அதுக்கப்புறம் கவரை மறந்துட்டாரு. ஆறுமாசம் கழிச்சு கம்பெனியில ஸ்ட்ரைக். கிட்டதட்ட மூடுற நிலைமை வந்துடுச்சு பணம் நஷ்டம். இவரை கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அப்பதான் கவர் ஞாபகம் வந்துச்சு. முதல் கவரை திறந்தா, “பழியை தூக்கி பழைய மேனேஜர் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. மறுபடியும் இரண்டாவது கவரை திறந்தார். “பழியை தூக்கி கவர்மெண்ட் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. இப்ப மூன்றாவது கவரை திறந்தார். “நீயும் மூணு கவரை ரெடி பண்ணு”ன்னு எழுதியிருந்தது