தேன்

உன் உதட்டினை நான் உரசி
நுனி நாவினை நான் தொட்டதும்
தித்திக்கிரதென்றாய் நீ....
இதை உன்னிடம் சொல்ல துடித்தவன் நான்.
இப்படிக்கு
நீ பருகிய தேன் துளி...

கவிதைக்கு பொய் அழகு
உன்னை பற்றி எழுத அது பொய்யாகிறது.

நீ கடி
கரும்புக்கு இனிக்கட்டும்.

கட்டி அனைத்து முத்தம் தருகிறாய்
என் சுவாச பையில் ரோஜா வாசம்...

மழை பெய்கிறது
வந்துவிடாதே நனைவதற்கு
காய்ச்சல் வந்துவிடும் மழைக்கு....

உன் விரல் கோதி சென்ற செடி மழையில் மட்டும் பன்னீர் வாசம்...

உன் வாசல் முற்றத்தில் வந்து நின்று கைகளை நீட்டு
போகும் நேரத்தை மறந்து உன்னோடு விளையாடிகொண்டிருக்கட்டும்
மழை..

உனக்கு காய்ச்சல்
கல்லூரிக்கு விடுமுறை விடசொல்லி
கொட்டி தீர்கிறது மழை..

காற்று எழுதிய கவிதை
மெல்லிய தென்றலில் நழுவும் உன் துப்பட்டா..

புதுக்கவிதைக்கு சுடிதார் போட்டு கல்லூரிக்கு அனுப்பி வைத்தது யார்?!

ஏழு வண்ணம் எனக்கு.
இருந்தும் எதற்கு?
பெருமை கருமைக்கு தானே
உன் புருவத்தில் இருப்பதால்.
வருத்தத்தில்
வானவில்..

உன்னை பற்றி விளம்பரம் செய்கிறது வானம்
"வானவில்"..

நீ அடிக்கடி வானத்தை பார்க்கும் பொழுதே எனக்கு தெரியும்..
உன் பார்வையில் நான் மட்டுமல்ல
மழையும் விழுந்துவிடும் என்று...
--தாகு

எழுதியவர் : thaagu (16-May-11, 11:25 am)
Tanglish : thaen
பார்வை : 366

மேலே