உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 16

என்னை கடந்து போகும் போது - நீ
இயல்பாய் நடந்து போக முடியவில்லை
என்பதிலிருந்தே தெரிகிறது - நீ
என்னை மறக்க முயன்று தோற்றுப் போனாயென.

இன்னும் ஏன் இந்த விளையாட்டு
இன்றோடு தொலையட்டும் உன் சீராட்டு.
உன் ஈகோவை இறக்கி வைத்துவிட்டு
என்னை உன்னிடம் அழைத்துக் காட்டு.

சில நிமிடங்களில் உடைத்துவிடக் கூடியதுதான்
உன் மௌனம் என்றாலும்
உன்னைத் தெரியாததுபோல் நானும்
என்னைத் தெரியாததுபோல் நீயும்

நடித்துவிட்டுப் போகும்
இந்த நாடகத்தை ரசிக்கின்றேன்.
"உனக்கும் எனக்குமான கவிதையை
எழுதி முடிக்கும் வரை."

உடையாத உன் மௌனத்தால்
உடைந்து கொண்டிருக்கிறது நம் உறவு.
என்பதை நீ உணர்வாயா ...?
என் உயிரின் உயிரே....

எழுதியவர் : parkavi (11-Jul-15, 9:35 pm)
பார்வை : 87

மேலே