அறநிலை ஒருநிலை

அ ற நி லை

என் நிலை கொள்ளினும்
தன் நிலை மாறாது
சொல்லிலும் செயலிலும்
ஒரு நிலை கொள்வாதே....

ஏற்றமும் இறக்கமும் இயற்கையின் தோற்றமாய்
சுற்றமும் சூழலும்
சூதுகொண்ட போதிலும்....

மாற்றமும் ஏமாற்றமும்
சீற்றம் கொண்டதாயினும்
ஆற்றலாய் அறிவிலும்
அடிபிதற்றா தோற்றமே.....

இன்பமும் துன்பமும்
இடைக்கொள்ளும் போதிலும்
அடக்கமாய் அன்பையே
அடிகொண்டு நிற்கவே.....

கோபமும் தாபமும்
குடி கொண்ட போதிலும்
பாவமும் பதற்றமும்
பறிசெய்து நோக்கவே....

ஏழ்மையும் தாழ்மையும்
பாழ்ப்புணர்ந்த போதிலும்
இன்மையும் எளிமையும்
அண்மைகொண்டு அணுகவே

ஆசையும் பாசமும்
ஓசைகொண்ட போதிலும்
அகத்திலும் சுகத்திலும்
அறம்கொண்டு வாழ்வாரே....

மண்ணிலும் மனதிலும்
மாண்புடனே போற்றிடுவார்.....

பிரியமுடன்
அசுபா....

எழுதியவர் : அசுபா (12-Jul-15, 1:14 am)
பார்வை : 67

மேலே