சொல்லமுடியாத சுமைகள்
காதலித்திருந்தால்
அது உனக்கும் தெரிந்திருக்கும்
கண்கள்
திறந்திருக்கும் போதே
இதயம்
களவுபோகும் அதிசயம்
உதடுகள்
சொல்லிச் சொல்லி
உணர்ந்தே போயிருக்கும்
இந்தக்காதல்
உன்னிடம்
சொல்லமுடியாத அவஸ்த்தை
அன்னையின்
கருவறையில்
அடுத்தொரு பிறவிகொண்டு
அழாமல் உச்சரிப்பேன்
முதன் முதலாக
உனது பெயரை
இது
காதலித்திருந்தால்
உனக்கும் தெரிந்திருக்கும்